கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் அன்னை இந்தியாவின் நெஞ்சில் வாளாக குத்துகிறது மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்


கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் அன்னை இந்தியாவின் நெஞ்சில் வாளாக குத்துகிறது மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
x
தினத்தந்தி 1 Jun 2021 1:09 AM GMT (Updated: 1 Jun 2021 1:09 AM GMT)

கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் அன்னை இந்தியாவின் நெஞ்சில் வாளாக குத்துகிறது மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெறிவித்தார்.

புதுடெல்லி, 

மத்திய அரசு கொரோனாவை கையாளும் விதம் மற்றும் பின்பற்றி வரும் தடுப்பூசி கொள்கையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறைகூறி வருகிறார். குறிப்பாக மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் எந்த கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என நேற்று அவர் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம், அன்னை இந்தியாவின் இதயத்தில் வாளாக குத்துகிறது. சோகமான உண்மை’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் இரட்டை இலக்கத்தில் சென்றிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியையும் அவர் கண்டித்துள்ளார்.

‘ஒரு மனிதரும், அவரது ஆணவமும் மற்றும் ஒரு வைரசும், அதன் மாறுபாடுகளும்’ என மற்றொரு பதிவில் குறிப்பிட்டு இருந்த ராகுல் காந்தி, கொரோனாவுக்கு பிறகு 97 சதவீத இந்தியர்கள் மேலும் ஏழைகளாக மாறியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Next Story