ஊரடங்கால் 97 சதவீத இந்தியர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி - ராகுல் காந்தி டுவிட்டரில் விமர்சனம்


ஊரடங்கால் 97 சதவீத இந்தியர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி - ராகுல் காந்தி டுவிட்டரில் விமர்சனம்
x
தினத்தந்தி 1 Jun 2021 2:50 AM GMT (Updated: 1 Jun 2021 2:50 AM GMT)

ஊரடங்கு காரணமாக 97 சதவீத இந்தியர்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை காரணமாக மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு, தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் குறையும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா பாதிப்பை மத்திய அரசு சரியான முறையில் கையாள தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர், “கொரோனா 2வது அலை ஊரடங்கு காரணமாக 97 சதவீத இந்தியர்கள் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளனர். மேலும் மே மாத நிலவரப்படி, வேலையிழப்பு அதிகரித்துள்ளது. இதற்கு ஒரு மனிதரும் அவரது ஆணவமும் தான் காரணம் என்றும் அதோடு ஒரு வைரசும் அதன் உருமாற்றமும் இதற்கு காரணமாகும்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Next Story