தேசிய செய்திகள்

”ராஜஸ்தானில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தடுப்பூசி வீண் என்பதே இல்லை” - சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா + "||" + Vaccination is not in vain in the vaccination process in Rajasthan Health Minister Raghu Sharma

”ராஜஸ்தானில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தடுப்பூசி வீண் என்பதே இல்லை” - சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா

”ராஜஸ்தானில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தடுப்பூசி வீண் என்பதே இல்லை” - சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா
ராஜஸ்தானில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தடுப்பூசி வீண் என்பதே இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தற்போது மூத்தக் குடிமக்களைத் தொடர்ந்து, 18 முதல் 45 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசிக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ராஜஸ்தானிலும் அதிகப்படியான தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. 

இந்நிலையில், ராஜஸ்தானில் 18 முதல் 45 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தடுப்பூசி வீண் என்பதே இல்லை என, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா கூறுகையில், ராஜஸ்தானில் மே 28-ம் தேதி வரை 1.66 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 45 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தடுப்பூசி வீண் என்பது '0' சதவீதமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டபோது 2 சதவீத தடுப்பு மருந்து வீணானது உண்மைதான். அது இந்த முறை தவிர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது - அசோக் கெலோட் தகவல்
ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியதாக முதல்-மந்திரி அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
2. ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
3. ராஜஸ்தான் சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. ராஜஸ்தான்: கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்து 5 பேர் பலி
ராஜஸ்தானில் கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.
5. ராஜஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு
ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.