மருத்து உற்பத்தி நிறுவனங்கள் ஊக்கத்தொகை பெற ஜூலை 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு


மருத்து உற்பத்தி நிறுவனங்கள் ஊக்கத்தொகை பெற ஜூலை 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2021 3:17 AM GMT (Updated: 2 Jun 2021 3:17 AM GMT)

மருத்து உற்பத்தி நிறுவனங்கள் ஊக்கத்தொகை பெற ஜூலை 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்திய மருந்து பொருட்கள் துறையில் முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்த‌து. 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தற்போது வெளியிட்டு உள்ளது. 

அதன்படி சிறு, குறு மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்து உள்ளார்.

Next Story