கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்


கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 2 Jun 2021 12:05 PM GMT (Updated: 2 Jun 2021 12:05 PM GMT)

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி கேரளாவில் தொடங்கும். தொடர்ந்து 4 மாதங்கள் நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும். இந்த நிலையில், நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக  நாளை துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அதேபோல், வட இந்தியாவில்  அடுத்த 3 நாட்களுக்கு  ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கமான அளவு இருக்கும் எனவும் வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story