தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: “தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது”- மாவட்ட நிர்வாகம் அதிரடி + "||" + 'No vaccination, no salary' for govt employees in UP district

உத்தரபிரதேசம்: “தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது”- மாவட்ட நிர்வாகம் அதிரடி

உத்தரபிரதேசம்: “தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது”-  மாவட்ட நிர்வாகம் அதிரடி
தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரபிரதேசத்தில் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரோசாபாத், 

கொரோனா தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என மாவட்ட தலைமை வளர்ச்சி அதிகாரி சார்சிட் கவுர் அறிவித்துள்ளார்.

மாவட்ட மாஜிஸ்திரேட்டு நீதிபதி சந்திரா விஜய் சிங், வாய்மொழியாக தடுப்பூசி இல்லையென்றால் சம்பளம் இல்லை என்று கூறியதை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்துவதாக அவர் கூறினார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டு, தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மே மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மாவட்ட கருவூல அதிகாரி மற்றும் பிற துறை தலைமை அதிகாரிகள், தடுப்பூசி போட்டவர்களின் விவரங்களை சேகரிக்கத்தொடங்கி உள்ளனர். இதையடுத்து அரசு ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை நிறுத்திவிடுவார்களோ என்று தடுப்பூசி போட விரைந்துள்ளனர் என்றும் அதிகாரி சார்சிட் கவுர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் அதிக தடுப்பூசி, தமிழகத்திற்கு 4-வது இடம்
ஒரே நாளில் அதிக தடுப்பூசி என்ற கணக்கில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இணையத்தில் சரியாக பதிவு செய்யாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2. மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
3. கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
4. ஈரோடு மாவட்டத்தில் நாளை 847 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்; 1 லட்சம் பேருக்கு செலுத்தப்படுகிறது
ஈரோடு மாவட்டத்தில் 847 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
5. வருகிற 13-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாத தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது தொழிற்சாலைக்கு இணை இயக்குனர் உத்தரவு
வருகிற 13-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாத தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகன் உத்தரவிட்டு உள்ளார்.