தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா அறிவிப்பு + "||" + Lockdown In Karnataka Extended Till June 14

கர்நாடகாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 14-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த மே மாதம் 11-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகும் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், கடந்த மாதம் 24-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு வருகிற 7-ந் தேதி காலை நிறைவடைகிறது.

கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிபுணர் குழு, கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி வருகிற 7-ந் தேதி காலை 6 மணி முதல் 14-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் பலி
கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
2. கர்நாடகாவில் மேலும் 1,116- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் இன்று மேலும் 1,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
4. கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
கர்நாடகாவில் இன்று புதிதாக 973 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ் எதிர்ப்பு
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது என்றும், இதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.