தேசிய செய்திகள்

கேரளாவில் ஆதிவாசிகள் தலைவி பா.ஜ.க கூட்டணியில் சேர ரூ.10 லட்சம் ; ஆடியோ வெளியாகி பரபரப்பு + "||" + BJP in another row: K Surendran accused of giving CK Janu Rs 10 lakh to join NDA

கேரளாவில் ஆதிவாசிகள் தலைவி பா.ஜ.க கூட்டணியில் சேர ரூ.10 லட்சம் ; ஆடியோ வெளியாகி பரபரப்பு

கேரளாவில் ஆதிவாசிகள் தலைவி பா.ஜ.க கூட்டணியில் சேர ரூ.10 லட்சம் ;  ஆடியோ வெளியாகி பரபரப்பு
கேரளாவில் ஆதிவாசிகள் தலைவி பா.ஜ.க கூட்டணியில் சேர ரூ.10 லடசம் கொடுக்கபட்டது என அதே கூட்டணி கட்சியில் உள்ள மற்றொரு கட்சி ஆடியோ ஆதாரத்துடன் குற்றம்சாட்டி உள்ளது.
திருவனந்தபுரம்: 

கேரளா  ஆதிவாசிகள் தலைவி சி.கே.ஜானுவுக்கு  பா.ஜ.க கூட்டணிக்கு வர  ரூ .10 லட்சம் கொடுத்ததாக  பா.ஜ.க கூட்டணி கட்சியான  ஜனாதிபத்ய ராஷ்டிரிய கட்சி (ஜேஆர்பி) மாநில பொருளாளர் பிரசீதா அஜிகோட் குற்றம் சாட்டி உள்ளார்.சி.கே.ஜானு சுல்தான் பத்தேரியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஒ.ராஜகோபால் வெற்றி பெற்றார். தற்போது நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கையில் இருந்த அந்த ஒரு தொகுதியும் பறிபோனது மட்டுமின்றி, பல தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தது.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த  ஆதிவாசிகள் தலைவியான சி.கே. ஜானுவுக்கு  ரூ.10 லட்சம் கொடுத்ததாக ஜனாதிபத்ய ராஷ்டிரிய கட்சி மாநில பொருளாளர் பிரசீதா  சுரேந்தரனுடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  

அந்த ஆடியோவில் ஆண் குரல் மற்றும் பெண் குரல் உள்ளது  பிரசீதா இது தனக்கும் சுரேந்திரனுக்கும் என்று கூறி உள்ளார்.

ஆடியோவில் பிரசீதா சிபிஐ (எம்) கட்சியில் இருக்கும் போது  அவர் ஒருவரிடமிருந்து கொஞ்சம் கடன் வாங்கியதாக (சி.கே.ஜானு) கூறுகிறார். அவர்கள் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதால், அதை திருப்பிச் செலுத்தாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர முடியாது என்று அவர் கூறுகிறார். அவர் ரூ .10 லட்சம் எதிர்பார்க்கிறார் அதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அந்த பணம் வழங்கப்பட்டால், அவர் இந்த 7 ஆம் தேதி (மார்ச் 7 2021) அமித் ஷாவின் கூட்டத்தில் இருப்பார். மேலும் பத்தேரியில் போட்டியிடுவார்   மேலும், அவருக்காக குறிப்பிடப்பட்ட ஒரு பதவியை தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யலாம். ஐயா, தயவுசெய்து பணத்தைப் பற்றி முடிவு செய்யுங்கள். நீங்கள் அவருக்கு நேரடியாக கொடுக்க முடிந்தால், நீங்கள் அதை கொடுங்கள் என பெண் குரல் முடிகிறது.

பின்னர் பணம் எங்கே, எப்போது ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆண் குரல் கேட்கிறது.7 ஆம் தேதி (மார்ச் 7), (நீங்கள்) வரும்போது நேரடியாக பணம் கொடுக்கலாம்" என்று அவர் சொல்கிறார். தேதிக்கு முன்பே ஜானு பணம் பெற விரும்புகிறார் என்று பிரசீதா குறுக்கிடுகிறார்.

“அவர் 6 ஆம் தேதி (மார்ச் 6) வரட்டும். நான் நேரடியாக தருகிறேன். நீங்களும் வரலாம். தேர்தலின் போது இந்த பணத்தை அங்கும் இங்கும் கொண்டு செல்ல முடியாது, ”என்று ஆண் குரல் பேசுகிறது.

"எனவே 6 ஆம் தேதி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட்ட நாங்கள் நினைக்கிறோம்," என்று பிரசீதா கூறுகிறார். மார்ச் 6 ஆம் தேதி பணம் வழங்கப்படும் என்று அந்த நபர் உறுதியளிக்கிறார்.

சி.கே.ஜானு, இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார், மேலும் இது குறித்து  தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். எனது சார்பாக பணம் வாங்க நான் யாரையும் நியமிக்கவில்லை. சுரேந்திரனிடமிருந்து பணம் பெற, எனக்கு பிரசீதா போன்ற ஒரு மூன்றாவது நபர் தேவையில்லை. கேரளாவில் எனக்கு அதிக தொடர்புகள் உள்ளன. நான் அமித் ஷாவை கூட நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ”என்று அவர் கூறினார்.

இது குறித்து சுரேந்திரன்  கூறும் போது நீங்கள் என்னை அவமதிக்கலாம், ஆனால் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளுக்கு சேவை செய்த ஒரு சமூக சேவையாளரை நீங்கள் அவமதிக்கிறீர்கள், ஒருவரின் தொலைபேசி உரையாடலை  வெளியிடுகிறீர்கள். சி.கே.ஜானுவும் நானும் எதுவும் பேசவில்லை. அவர் என்னிடம் பணம் கேட்கவில்லை, நான் கொடுக்கவில்லை. நாங்கள் பத்தேரியில் தேர்தல் செலவுகள் செய்தோம் , எல்லாமே வழக்கம் போல் செய்யப்பட்டன, ”என்று கே.சுரேந்திரன் கூறினார்.

கேரளாவில் முத்தங்கா போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய சி.கே.ஜானு, சிபிஐ (எம்) கட்சியில் இருந்தார். 2016 ஆம் ஆண்டில், அவர் ஜனாதிபத்ய ராஷ்டிரிய கட்சியை உருவாக்கி, பின்னர் பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தார். இருப்பினும், பின்னர் 2018 இல் அந்த கூட்டணியை விட்டு வெளியேறினார். 
பின்னர் கடந்த தேர்தலில் கூட்டணியில் சேர்ந்தார்

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய விஸ்டா திட்டம் : எதிர்ப்பாளர்களின் பொய்களும் திட்டமும் அம்பலப்பட்டுவிடும்: பிரதமர் மோடி
மத்திய விஸ்டா திட்டம் குறித்து பொய்யுரைப்பவர்களின் எண்ணங்கள் வெட்டவெளிச்சமாகும்.எதிர்ப்பாளர்களின் பொய்களும் திட்டமும் அம்பலப்பட்டுவிடும் என பிரதமர் மோடி கூறினார்.
2. உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆட்சி நிர்வாகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்நாயத்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
3. மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
பாரதியாரின் 100-வது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
4. இந்திய பாரா ஒலிம்பிக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து
இந்திய பாரா ஒலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார்.
5. பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது - பிரதமர் மோடி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.