தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம்- ராகேஷ் டிக்கைட் + "||" + Farmers protest Central govt wants to shift agitation from Delhi to Haryana alleges Rakesh Tikait

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம்- ராகேஷ் டிக்கைட்

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம்- ராகேஷ் டிக்கைட்
புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறியுள்ளார்.
புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேறமாட்டார்கள் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் போராடி வருகின்றனர். கடும் குளிர், வெயில், கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் 6 மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று  விவசாயிகள் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், மத்திய அரசு இந்த போராட்டத்தை டெல்லியில் இருந்து அரியானாவுக்கு மாற்ற முயற்சிக்கிறது. ஆனால் இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அரசு அதனுடைய சூழ்ச்சியில் வெற்றிபெற விடமாட்டோம்.

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற கூட்டத்தொடர் மத்தியில் ஜந்தர் மந்தரை போராட்ட களமாக்கிய விவசாயிகள்
ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம், எங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான தூரம் தொடர்ந்து குறைந்து வருகிறது என விவசாய அமைப்புகள் கூறி உள்ளன.
2. வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா
வேளாண் சட்டங்களை எதிர்த்து ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.