பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 2 முக்கிய தலைவர்களை நீக்கிய மாயாவதி


பகுஜன் சமாஜ் கட்சியில்  இருந்து  2 முக்கிய தலைவர்களை நீக்கிய மாயாவதி
x
தினத்தந்தி 4 Jun 2021 9:16 AM GMT (Updated: 4 Jun 2021 9:16 AM GMT)

கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சட்டமன்ற கட்சி தலைவர் உட்பட 2 எம்.எல்.ஏ.க்களை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ

உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்ற்றும்  ஆறு மாதங்களே உள்ள நிலையில், அண்மையில் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக  மிக முக்கியமான இரண்டு தலைவர்களான லால்ஜி வர்மா மற்றும் ராம் அச்சல் ராஜ்பர் ஆகியோரை மாயாவதி கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.

கடந்த 2017 சட்டசபை தேர்தலில்  பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 407 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது இந்த  தலைவர்கள் நீக்கம் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என் அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

வர்மாவுக்கு பதிலாக பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக ஷா அலாம் ஏலியஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தான் பகுஜன் சமாஜ் கட்சியில் தான் அதிகம் இருப்பதாகவும், வேறு எந்தக் கட்சியிலும் சேரத் திட்டமில்லை என்றும், மாயாவதியைச் சந்தித்த பின்னர் வேறுபாடுகளைத் தீர்ப்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் மர்மா கூறி உள்ளார். வெளியேற்றப்பட்ட அனைவருமே  பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்களாகத் தொடர்கின்றனர்.  ஏனெனில் மாயாவதி அவர்களைப் பற்றி சபாநாயகருக்கு கடிதம் எழுதும் எழுதவில்லை.

பகுஜன் சமாஜ் கட்சியின் கோட்டையான அம்பேத்கர்நகர் மாவட்டத்தில் கட்டேரி தொகுதியைச் சேர்ந்த வர்மா ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும், சட்டமன்றத்தில் கட்சியின் தலைவராகவும் இருந்து உள்ளார்.ராஜ்பர் அமேத்கர்நகரில் அக்பர்பூரைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ராஜ்பர் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் பதவியை வகிக்கவில்லை என்றாலும், அவர் முன்னர் கட்சியின் மாநிலத் தலைவராகவும் அதன்  தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்தார். குர்மி தலைவரான வர்மாவைப் போல அவர் கடந்த காலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி அரசாங்கத்தில்  அமைச்சராக இருந்து உள்ளார்.

Next Story