2023ம் ஆண்டு முதல் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை: அரசு முடிவு


2023ம் ஆண்டு முதல் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை:  அரசு முடிவு
x
தினத்தந்தி 4 Jun 2021 2:54 PM GMT (Updated: 4 Jun 2021 2:54 PM GMT)

வருகிற 2023ம் ஆண்டு முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய அரசு முடிவு செய்த விவரம் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கடைப்பிடிக்கப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி வழியே உரையாற்றுகிறார்.  சிறந்த சுற்றுச்சூழலுக்காக உயிரிஎரிபொருள்களை ஊக்குவித்தல், இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், 2020-2025 வரையிலான 5 ஆண்டுகளில் இந்தியாவில் எத்தனால் பயன்பாடு பற்றிய திட்ட வரைபடத்திற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

வருகிற 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடும் வகையிலான இ-20 அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விவசாயிகளுடனும் உரையாடுகிறார்.


Next Story