தேசிய செய்திகள்

மெகுல் சோக்சியை கூட்டி வர சென்ற அதிகாரிகள் நாடு திரும்பினர் + "||" + Mehul Choksi once again left from the clutches of India

மெகுல் சோக்சியை கூட்டி வர சென்ற அதிகாரிகள் நாடு திரும்பினர்

மெகுல் சோக்சியை கூட்டி வர சென்ற அதிகாரிகள் நாடு திரும்பினர்
டோமினிக்காவில் இருந்து மெகுல் சோக்சியை கூட்டி வர சென்ற அதிகாரிகள் வெறுங்கையுடன் நாடு திரும்பினர். தனிவிமானமும் புறப்பட்டது.
புதுடெல்லி, 

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளை அதிகாரிகளை பயன்படுத்தி, ரூ.13 ஆயிரத்து 500 கோடி கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்து கடந்த 23-ந் தேதி மாயமானார்.

பக்கத்து நாடான டோமினிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக பிடிபட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி, அவருடைய வக்கீல்கள் டோமினிக்கா ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

நேற்று முன்தினம் டோமினிக்கா ஐகோர்ட்டு ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி பெர்னி ஸ்டீபன்சன் தள்ளி வைத்தார்.

அவர் அரசு மற்றும் மெகுல் சோக்சி தரப்பு வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி, விசாரணை தேதியை முடிவு செய்வார். எப்படியும் ஒரு மாதத்துக்கு பிறகுதான் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. அதுவரை சோக்சி, நீதிமன்ற காவலில்தான் இருப்பார்.

இதனால், மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்து வர சென்றிருந்த சி.பி.ஐ. டி.ஐ.ஜி. சாரதா ரவத் தலைமையிலான விசாரணை அதிகாரிகள், டோமினிக்காவில் இருந்து புறப்பட்டனர். சோக்சியை நாடு கடத்த தேவையான ஆவணங்களுடன் இந்தியா அனுப்பி வைத்திருந்த கத்தார் ஏர்வேஸ் ஜெட் விமானத்திலேயே அவர்கள் திரும்பினர்.

அந்த விமானம், கடந்த மாதம் 28-ந் தேதி டெல்லியில் இருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் வழியாக டோமினிக்காவுக்கு சென்றது. ஒரு வாரமாக விமானமும், அதிகாரிகளும் டோமினிக்காவிலேயே முகாமிட்டு இருந்தனர்.

இந்தநிலையில், மெகுல் சோக்சியை அழைத்துவர முடியாமல், அதிகாரிகள் மாட்ரிட் வழியாக அதே விமானத்தில் டெல்லிக்கு திரும்பினர்.


தொடர்புடைய செய்திகள்

1. மெகுல் சோக்சிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டொமினிக்கா நீதிமன்றம்
மெகுல் சோக்சி ஆன்டிகுவா சென்று சிகிச்சை மேற்கொள்ள டொமினிக்கா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2. மெகுல் ஷோக்சிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டொமினிகா நீதிமன்றம்
மெகுல் ஷோக்சிக்கு டொமினிக்கன் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
3. மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட்டு மறுப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தேடப்பட்டு வந்த மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
4. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக கடை உரிமையாளருக்கு 2 மடங்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக கடை உரிமையாளருக்கு 2 மடங்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகள் குமுறல்.