இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும்  குறைந்தது
x
தினத்தந்தி 5 Jun 2021 4:20 AM GMT (Updated: 5 Jun 2021 4:20 AM GMT)

இந்தியாவில் கடந்த 58 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோன பாதிப்பு குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் கடந்த சில வாரங்களாக குறையத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி அதிர வைத்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல கொரோனா குறையத்தொடங்கியிருப்பது மக்களை சற்று  ஆறுதல் அடையச்செய்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பால் 3,380-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15.5 லட்சமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 1.97-லட்சம் பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story