தேசிய செய்திகள்

யோகி ஆதித்யநாத் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி - பாஜக வட்டாரத்தில் பரபரப்பு + "||" + No Birthday Wishes for Yogi From BJP Top Brass? Here's the Truth

யோகி ஆதித்யநாத் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி - பாஜக வட்டாரத்தில் பரபரப்பு

யோகி ஆதித்யநாத் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி - பாஜக வட்டாரத்தில் பரபரப்பு
யோகி ஆதித்யநாத் தனது 49-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
லக்னோ,

உத்தரபிரதேச முதல்மந்திரியாக செயல்பட்டு வருபவர் யோகி ஆதித்யநாத். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் நேற்று தனது 49-வது வயதில் அடியெடுத்து வைத்தார். நேற்று அவரது பிறந்தநாளுக்கு அம்மாநில அரசியல் கட்சியினர் யோகி ஆதியநாத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முக்கிய நபர்கள் யோகி ஆதித்யநாத்திற்கு தங்கள் டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

குறிப்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இதுபோன்ற பிறந்தநாளின் போது பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி பதிவிடுவார். 

ஆனால், நேற்று யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் எந்த வித வாழ்த்தும் பதிவிடவில்லை. இந்த சம்பவம் பாஜக கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2022-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் யோகி ஆதித்யநாத் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் வரும் தேர்தலில் யோகி ஆதித்தநாத்திற்கு பதிலாக வேறு நபரை முதல்வர் வேட்பாளராக அறிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்பட பாஜக தலைவர்கள் தங்கள் டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி பதிவிடாமல் நேரடியாக யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆட்சி நிர்வாகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்நாயத்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
2. சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் : யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. அகிலேஷ் யாதவுக்கு 48-வது பிறந்த நாள்; யோகி ஆதித்யநாத் வாழ்த்து
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு நேற்று 48-வது பிறந்த நாள் ஆகும். இதை சமாஜ்வாடி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினர்.
4. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்தார்.
5. பிரதமர் மோடி - யோகி ஆதித்யநாத் சந்திப்பு
பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லியில் இன்று சந்தித்தார்.