கொரோனா காலத்திலும் பா.ஜனதாவுக்கு ஆட்சி வெறி-உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்


கொரோனா காலத்திலும் பா.ஜனதாவுக்கு ஆட்சி வெறி-உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 6 Jun 2021 2:16 AM GMT (Updated: 6 Jun 2021 2:16 AM GMT)

கொரோனா தொற்று காலத்திலும் பா.ஜனதா ஆட்சி வெறி பிடித்து அலைவதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கினார்.

மும்பை, 

கொரோனா தொற்று காலத்திலும் பா.ஜனதா ஆட்சி வெறி பிடித்து அலைவதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கினார்.

முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் மராத்தி பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:  கொரோனா காலத்தில் உயிர்களை காப்பாற்றுவது தான் முக்கியம். அவர்கள் (பா.ஜனதா) ஏன் அதிகாரத்திற்கு வர நினைக்கிறார்கள் என தெளிவுப்படுத்தாவிட்டால், மக்கள் அவர்களை மன்னிக்கமாட்டார்கள்.

இந்த கொரோனா காலத்திலும் கூட ஆட்சி அதிகார வெறிப்பிடித்து அலைவது, சட்ட ஒழுங்கை பாதிக்க வழிவகுக்கும். முதல் மந்திரி ஆக வேண்டும் என்பது எப்போதும் எனது இலக்காக இருந்து இல்லை. சிவசேனாவை சேர்ந்த தொண்டனை முதல் மந்திரி ஆக்குவேன் என எனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நான் இன்னும் நிறைவேற்றவில்லை. 

நான் அரசியலில் அதிக நாட்டம் கொண்டவன் இல்லை. தந்தைக்கு உதவியாக இருக்கவே அரசியலுக்கு வந்தேன். எனது ஆட்சியின் போது நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பொறுப்புகளை விட்டு நான் ஓடியது கிடையாது. முதல் மந்திரியாக என்னால் செய்ய முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story