இந்தியாவில் 23.10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை


இந்தியாவில் 23.10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை
x

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 23 கோடியை கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 23 கோடியை கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் 31,20,451 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களில் 6,05,25,195 பேருக்கு முதல் தவணையும், 1,91,99,839 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 45 முதல் 60 வயது வரையிலான பயனாளா்களில் 7,06,41,613 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,91,99,839 பேருக்கு 2 தவணைகள் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இதுவரை 23,10,89,241 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 99,62,728 சுகாதாரப் பணியாளா்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 68,53,413 சுகாதாரப் பணியாளா்களுக்கு 2 தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளது. முன்களப் பணியாளா்கள் 1,61,57,437 பேருக்கு முதல் தவணையும், 86,58,805 பேருக்கு 2 தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story