தேசிய செய்திகள்

டெல்லியில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டம்:மத்திய அரசு மீது கெஜ்ரிவால் பாய்ச்சல் + "||" + "If Pizza Can Be Delivered At Home, Why Not Ration": Arvind Kejriwal

டெல்லியில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டம்:மத்திய அரசு மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்

டெல்லியில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டம்:மத்திய அரசு மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பிசா டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் போது ஏன் ரேஷன் பொருட்களை விநியோகிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு  ஒப்புதல் அளிக்க மறுத்ததாகக் கூறப்படும்  நிலையில், மத்திய அரசு மீது கெஜ்ரிவால் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  

இன்று டிஜிட்டல் முறையில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறுகையில் , “டெல்லியில் வீடு வீடாக ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் அமல் ஆவதற்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில் மத்திய அரசு திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பிசா டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் போது ஏன் ரேஷன் பொருட்களை விநியோகிக்க அனுமதி அளிக்கக் கூடாது.” என்றார். மேலும் ரேஷன் மாஃபியாக்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அனுமதி அளிக்க மறுப்பதாகவும் கெஜ்ரிவால் சாடினார். 


தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை 7 மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில உணவு ஆணைய தலைவர் உத்தரவு
ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 7 மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி உத்தரவிட்டுள்ளார்.
2. தீபாவளி பண்டிகை: டெல்லியில் பட்டாசுக்கு தடை
டெல்லியில் நிலவும் அதிகப்படியான காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. முதியோர்கள் தடையில்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்க நடவடிக்கை
முதியோர்கள் தடையில்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. டெல்லியில் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தகவல்
டெல்லியில் இதுவரை 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.