தேசிய செய்திகள்

நீல நிற ‘டிக்’குக்காகத்தான் அரசு போராடுகிறது, தடுப்பூசிக்கு மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி கிண்டல் + "||" + Government fighting for blue tick, be self-reliant for vaccine: Rahul Gandhi

நீல நிற ‘டிக்’குக்காகத்தான் அரசு போராடுகிறது, தடுப்பூசிக்கு மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி கிண்டல்

நீல நிற ‘டிக்’குக்காகத்தான் அரசு போராடுகிறது, தடுப்பூசிக்கு மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி கிண்டல்
மத்திய அரசு நீல நிற ‘டிக்’குக்காகத்தான் போராடுவதாகவும், தடுப்பூசியை மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.

வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் கணக்கு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில், பிரபலங்களை அடையாளப்படுத்த பயன்படுத்தி வரும் நீல நிற ‘டிக்’ குறியீட்டை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது. இதனால் சமூக வலைத்தள வட்டாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. உடனடியாக டுவிட்டர் நிறுவனத்தை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அது குறித்து எடுத்துரைத்தனர்.

இதைத்தொடர்ந்து வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் அந்த சரிபார்க்கப்பட்ட பேட்ஜ் (நீல நிற டிக்) மீண்டும் இணைக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.

டுவிட்டரில் கிண்டல்

இந்த சம்பவத்தை மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்துடன் தொடர்புபடுத்தி ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காததையும், அரசின் தடுப்பூசி கொள்கையையும் தொடர்ந்து விமர்சித்து வரும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் அது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘நீல நிற டிக்குக்காகத்தான் மோடி அரசு போராடுகிறது. உங்களுக்கு (மக்கள்) தடுப்பூசி வேண்டுமென்றால் நீங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியதுதான்’ என குறிப்பிட்டு இருந்தார். இதற்காக ‘முன்னுரிமை’ என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தி இருந்தார்.

பா.ஜனதா பதிலடி

அதேநேரம் ராகுல் காந்தியின் இந்த கிண்டலுக்கு பா.ஜனதாவும் பதிலடி கொடுத்து உள்ளது. ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தை விட்டு களத்தில் இறங்கி உழைக்க வேண்டும் எனவும், தடுப்பூசி திட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் முதல்-மந்திரிகளை கேட்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘டுவிட்டரில் அரசியல் செய்வது அவரின் (ராகுல் காந்தி) மிக முக்கியமான செயல்பாடும், தளமும் ஆகும். இவ்வளவு பெரிய தடுப்பூசி திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், ஏழைகளுக்கு இலவச ரேஷனை வழங்குவதிலும் மோடி அரசு பாராட்டத்தக்க வேலையைச் செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியிடம் இப்போதும் விளக்கம் கேட்கலாம்; எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் எதிர்க்கட்சிகள் இப்போதும் விளக்கம் கேட்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூறினார்.
2. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன - மத்திய அரசு
ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை முழுதுமாக திரும்பிய பிறகு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என மத்திய அரசு கூறி உள்ளது.
3. மத்திய அரசுக்கான நிலுவைத்தொகை; தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், 1999-ல் கொண்டுவரப்பட்ட தேசிய அளவிலான புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.
4. கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும்? மக்களவையில் ராகுல்காந்தி கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவையில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி பாரதி பிரவிண் பவார் பதில் அளித்தார்.
5. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மியான்மர் நாட்டினருக்கு வேலையா? மத்திய அரசு விளக்கம்
மியான்மர் நாட்டவர்களுக்கு அப்படி வேலைவாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.