சிக்கிம் மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு


சிக்கிம் மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 7:51 PM GMT (Updated: 6 Jun 2021 7:51 PM GMT)

சிக்கிம் மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காங்க்டாக், 

சிக்கிம் மாநில அரசு ஜூன் 14 வரை மாநிலம் தழுவிய ஊரடங்கை நீட்டித்து நேற்று அறிவித்துள்ளது. அதாவது தற்போதைய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அங்கு கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இருப்பினும், ஹார்டுவேர் கடைகளை 7-ந்தேதி (இன்று) முதல் திறந்திருக்க அனுமதிப்பது, மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருப்பதை மேலும் இரண்டு மணி நேரம் கூடுதலாக மாலை 4 மணிவரை திறந்திருக்க அனுமதிப்பது போன்ற தளர்வுகளுடன், ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

மாநில முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங், தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சிக்கிமில் 17,111 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது, 273 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 65,000 பேருக்கு தடுப்பூசி போட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Next Story