தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது + "||" + A Pakistan intruder was apprehended near international border in Poonch in Kashmir

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் நேற்று இரவு வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து, எச்சரிக்கையுடன் செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் அந்த நபர் இந்திய எல்லைக்குள் நுழைந்த உடன் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் காஷ்மீரில் எதேனும் தாக்குதல் நடத்த திட்டமிடிருந்தா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் ஆய்வு
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
2. ஜம்மு மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனை - செல்போன்கள் பறிமுதல்
ஜம்மு மத்திய சிறைச்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகள் வைத்திருந்த 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3. காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை
காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
4. காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் குல்ஹம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
5. காஷ்மீரில் விமானப்படை தளம் மீது தாக்குதல்: வழக்கு என்.ஐ.ஏ-க்கு மாற்றம்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமானப்படை தளம் மீது டிரோன்கள் மூலமாக பயங்கரவாதிகள் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.