டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.36% ஆக குறைந்தது


டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.36% ஆக குறைந்தது
x
தினத்தந்தி 7 Jun 2021 12:39 PM GMT (Updated: 7 Jun 2021 12:39 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 231- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. 2-வது அலை பாதிப்பில் மிகக்கடுமையான பாதிப்புக்கு பிறகு டெல்லி மீண்டு வந்து இருப்பது அங்குள்ள மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. தொற்று பரவல் குறைந்து இருப்பதால் டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 231- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.36-சதவிகிதமாக குறைந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 876- ஆக உள்ளது. எனினும், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 36-பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,208- ஆக உள்ளது. 

Next Story