தேசிய செய்திகள்

நடனமாட கூறி குடித்து விட்டு கலாட்ட செய்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள் + "||" + Woman calls off wedding after groom, his friends turn up drunk; 'baraatis' held hostage

நடனமாட கூறி குடித்து விட்டு கலாட்ட செய்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள்

நடனமாட கூறி குடித்து விட்டு கலாட்ட செய்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள்
மணமகளை நடனமாடும்மாறு கூறி குடித்து விட்டு கலாட்ட செய்த மணமகனால் திருமணத்தை மணமகள் நிறுத்தினார்.
லக்னோ

உத்தரபிரதேசம்  பிரயாகராஜில் உள்ள பிரதாப்கர் நகரின் திக்ரி கிராமத்தில் ஒரு விவசாயி தனது 22 வயது  மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து இருந்தார். மணமகன் ரவீந்திர படேல் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்து இருந்தார்.

திருமணத்திற்கு முன்  மண்மகளை மணமகன் நடனமாடுமாறு கூறினார். ஆனால் மணமகள் மறுத்து விட்டார். இது மணமகனைத் கோபபடுத்தியது . இதனால் கோபமான மணமகன் தன் நண்பர்கலுடன் சேர்ந்து குடித்து விட்டு வந்து. மணமகள் நடனம் ஆடவில்லை என கலாட்டாவில் ஈடுபட்டார். அவரது நடத்தையால் ஆத்திரமடைந்த அந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.

இதை தொடர்ந்து மணமகன் வீட்டார் அங்கிருந்து எஸ்கேப் ஆக எண்ணினர். ஆனால் மணமகள் வீட்டார்  மணமகனையும் அவரது குடும்பத்தினரையும் சிறைபிடித்தனர். உடனடியால போலீசுக்கு தகவல் தெர்விக்கபட்டது மணமகன் திருமணத்திற்காக வாங்கிய பணத்தையும் பரிசு பொருட்களையும் திருப்பி தர சம்மதித்ததை தொடர்ந்து  அவர்கலை மணமகள் வீட்டார்  விடுவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளமான பூஷன்குமார் மீது பாலியல் புகார்
பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளரான டி-சீரிஸின் நிர்வாக இயக்குனரான பூஷன்குமார் மீது 30 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்து உள்ளார்.
2. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாப சாவு; மோடி இரங்கல்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
3. பழனி கோயிலுக்கு வந்த கேரளாவை சேர்ந்த பெண் கடத்தி பாலியல் பலாத்காரம்
பழனி கோயிலுக்கு வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகளை தாக்கி மனைவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்
4. உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் - பத்திரிகையாளரை தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி
உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
5. உத்தரபிரதேசம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு கட்சியினர் இடையே மோதல்
உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.