தேசிய செய்திகள்

இந்தியாவில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: மத்திய சுகாதார மந்திரி + "||" + Black fungus affects 28,252 people in India: Union Health Minister

இந்தியாவில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: மத்திய சுகாதார மந்திரி

இந்தியாவில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு:  மத்திய சுகாதார மந்திரி
இந்தியாவில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

புதுடெல்லியில் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் உயர்மட்ட அளவிலான மந்திரிகளுடனான 28வது ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வழியே இன்று நடந்தது.

இதில், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

நோய் பாதித்தவர்களில் 86 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பும், 62.3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பும் உள்ளது.

நாட்டில் அதிக அளவாக மராட்டியம் (6,339) கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.  இதனை தொடர்ந்து குஜராத் (5,486) 2வது இடத்தில் உள்ளது.

நாட்டில் 23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு 141 நாட்கள் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன.  இது உலகளவில் 2ம் இடம் ஆகும்.  அமெரிக்கா இந்த எண்ணிக்கையை அடைய 134 நாட்கள் எடுத்து கொண்டது என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவில் திருவிழா நடத்த தடை: மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
2. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் ஏழைக்கும், பணக்காரருக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை: மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா
ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழைக்கும், பணக்காரருக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்கிறது என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
3. கொரோனாவால் 31 பேர் பாதிப்பு
கொரோனாவால் 31 பேர் பாதிப்பு
4. யாஸ் புயல்: ஒடிசாவில் 75 லட்சம் பேர் பாதிப்பு; அரசு அதிகாரி தகவல்
ஒடிசாவில் யாஸ் புயலால் 10,644 கிராமங்களை சேர்ந்த 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.
5. கருப்பு பூஞ்சை நோயால் தாசில்தார் பாதிப்பு
கருப்பு பூஞ்சை நோயால் கள்ளக்குறிச்சி குடிமை பொருள் தாசில்தார் பாதிக்கப்பட்டுள்ளார்.