கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்த கொரோனா பாதிப்பு


கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 1:40 PM GMT (Updated: 7 Jun 2021 1:40 PM GMT)

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்து 569- மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு பரவலாக குறைந்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி,  கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,313- ஆக குறைந்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 42 ஆயிரத்து 395- ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 221- பேர் உயிரிழந்துள்ளனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,157- ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 21,291- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 83 ஆயிரத்து 992- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 830- ஆக உள்ளது.  

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்து 569- மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளன. 


Next Story