மராட்டியம்: ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு


மராட்டியம்:  ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 3:23 PM GMT (Updated: 7 Jun 2021 3:23 PM GMT)

மராட்டியத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 15 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் கொட்டாவடே படா என்ற பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதனையடுத்து தொழிற்சாலை முழுவதும் கரும்புகை பரவியது.

தீ விபத்து பற்றி அறிந்ததும் அருகேயிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதேபோன்று, தகவலறிந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.  அந்நிறுவனத்தில் 37 பேர் பணியில் இருந்துள்ளனர்.  இதுவரை 20 பேரை மீட்டு உள்ளனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.  10 பேரை காணவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவித்தது.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  மீட்பு பணியும் தொடர்ந்து வருகிறது என தீயணைப்பு துறை தெரிவித்தது.

இந்நிலையில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது.  அவர்களில் 15 பேர் பெண்கள்.  2 பேர் ஆண்கள் ஆவர்.  அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.


Next Story