கர்நாடகாவில் புதிதாக 11,958- பேருக்கு கொரோனா தொற்று


கர்நாடகாவில் புதிதாக 11,958- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 7 Jun 2021 4:25 PM GMT (Updated: 7 Jun 2021 4:25 PM GMT)

கர்நாடகாவில் இன்று புதிதாக 11,958- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் இன்று புதிதாக  11,958- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று 340- பேர் உயிரிழந்துள்ள நிலையில், 27,299- பேர் குணம் அடைந்துள்ளனர். 

கர்நாடகாவில்  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 824- ஆக குறைந்துள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 9.08 சதவிகிதமாக குறைந்துள்ளது.  கர்நாடகத்தில் நேற்று 12,209 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story