தேசிய செய்திகள்

கொரோனா 2-வது அலை; ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Corona 2nd wave; Corona curfew extended in Andhra Pradesh, Punjab and Uttarakhand

கொரோனா 2-வது அலை; ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா 2-வது அலை; ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு
ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
அமராவதி,

நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை வேகம் தணிந்து வந்தாலும், முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் அதுதொடர்பான ஊரடங்கை மாநில அரசுகள் நீட்டித்து வருகின்றன.

இந்நிலையில், ஆந்திரபிரதேசத்தில் ஊரடங்கு வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அறிவித்தார். மாநிலத்தில் கொரோனா சூழ்நிலை குறித்த உயர்மட்ட குழு கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதேநேரம், ஜூன் 10-ந்தேதிக்கு பிறகு தினமும் பிற்பகல் 2 மணி முதல் காலை 6 மணி வரைதான் ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், கடைகளை மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் நேற்று அறிவித்தார்.

சனிக்கிழமை உள்ளிட்ட வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போதைய ஊரடங்கு இன்று (ஜூன் 8-ந் தேதி) காலை 6 மணிக்கு முடிவுக்கு வந்த நிலையில், அம்மாநிலத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி காலை 6 மணி வரை, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில தலைமைச்செயலாளர் ஓம் பிரகாஷ் நேற்று முன்தினம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு
பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து , முதல் மந்திரி அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
2. ஆந்திராவில் புதிதாக 1,628 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,628 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நவ்ஜோத் சிங் சித்து அம்மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. ஆந்திராவில் மேலும் 2,665-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. ஆந்திராவில் இன்று 4,576 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஆந்திராவில் தற்போது 30,300 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.