டெல்லியில் வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி போடப்படும் - முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


டெல்லியில் வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி போடப்படும் - முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 11:52 PM GMT (Updated: 7 Jun 2021 11:52 PM GMT)

டெல்லியில் வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக டெல்லி அரசு அமைத்த தடுப்பூசி முகாம்களுக்கு நிறைய பேர் வரவில்லை. எனவே, வாக்குச்சாவடிகளை தடுப்பூசி மையங்களாக மாற்ற முடிவு செய்துள்ளோம். டெல்லியில் 280 வார்டுகள் உள்ளன. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், முதல்கட்டமாக 72 வார்டுகளில் 8-ந் தேதி முதல் வீடு, வீடாக செல்வார்கள்.

தகுதியுள்ள நபர்களுக்கு அவரவர் வீடு அருகே உள்ள வாக்குச்சாவடிகளில் நேரம் குறித்து கொடுப்பார்கள். அதன்படி, 5 வாரங்களில் 72 வார்டுகளில் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். அவர்களை அழைத்துச்செல்ல மின்ரிக்ஷா ஏற்பாடு செய்யப்படும்.

இதே பாணியில், 4 வாரங்களில் 280 வார்டுகளிலும் தடுப்பூசி பணி முடிக்கப்படும். 3 மாதங்கள் கழித்து, 2-வது தவணை தடுப்பூசிக்கும் இதே முறை பின்பற்றப்படும். 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும்போதும் வாக்குச்சாவடிகளிலேயே இப்பணி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story