தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது... சோதனை முயற்சியில் 22 நோயாளிகள் பாதிப்பு...? உண்மையா...? + "||" + UP Hospital Owner On 'Drill': I Cut Off Oxygen, Patients "Turned Blue"

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது... சோதனை முயற்சியில் 22 நோயாளிகள் பாதிப்பு...? உண்மையா...?

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது... சோதனை முயற்சியில் 22 நோயாளிகள் பாதிப்பு...? உண்மையா...?
உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என, ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தி சோதனை முயற்சி நடத்தியதால், 22 நோயாளிகள் பாதிக்கபட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஆக்ரா

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பரஸ் என்ற தனியார் மருத்துவமனையின் உரிமையாளரான அரிஞ்சய் ஜெயின் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி  கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் நோயாளிகளை டிஜ்சார்ஜ் செய்து கொள்ளுமாறு கூறியதாகவும் ஆனால் அதற்கு யாரும் தயாராக இல்லை என்றும் அரிஞ்சய் ஜெயின் கூறுவதாக பதிவாகியுள்ளது.

எனவே யாருக்கெல்லாம் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தினால் சமாளித்து விடுவார்கள் என்று பார்ப்பதற்காக, சோதனை முயற்சியாக 5 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதாக சிலரிடம் அரிஞ்சய் ஜெயின் கூறுவது பதிவாகியுள்ளது.

இதில் 22 பேருக்கு மூச்சுத்திணறி, உடல் நீலமாக மாறிவிட்டதாகவும், ஆக்சிஜன் இல்லை என்றால் அவர்கள் பிழைக்க மாட்டார்கள் என தெரிந்துகொண்டதாகவும் அரிஞ்சய் ஜெயின் கூறுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பரவத் தொடங்கிய நிலையில், விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆக்ரா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஏப்ரல் 26, 27ஆம் தேதிகளில் பரஸ் மருத்துவமனையில் 7 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள்: 30-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்
உத்தரபிரதேச மாநிலத்தில் 9 மருத்துவ கல்லூரிகளை வரும் 30-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.
2. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாப சாவு; மோடி இரங்கல்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
3. உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் - பத்திரிகையாளரை தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி
உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
4. உத்தரபிரதேசம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு கட்சியினர் இடையே மோதல்
உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
5. உத்தரபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி - 3 பேர் மாயம்
உத்தரபிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.