புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 545 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Jun 2021 10:25 AM GMT (Updated: 8 Jun 2021 10:25 AM GMT)

புதுச்சேரியில் தற்போது 7,147 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, “புதுச்சேரி மாநிலத்தில் 9,092 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 400, காரைக்கால் - 112, ஏனாம் - 24, மாஹே - 9 என மொத்தம் 545 (5.99 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புதுச்சேரியில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 1,115 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,032 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 7,147 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

புதிதாக 938 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து ஆயிரத்து 315 (92.02 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரத்து 783 பெருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 670 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 685 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story