தேசிய செய்திகள்

உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் சுவேந்து அதிகாரி சந்திப்பு + "||" + Bengal's Leader Of Opposition Suvendu Adhikari Meets Home Minister Amit Shah In Delhi

உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் சுவேந்து அதிகாரி சந்திப்பு

உள்துறை மந்திரி அமித்ஷாவுடன்  சுவேந்து அதிகாரி சந்திப்பு
உள்துறை மந்திரி அமித்ஷாவை மே.வங்காள சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுவேந்து அதிகாரி இன்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி,

மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் பாஜக எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மாநில விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பாஜக தொண்டர்கள் மீது பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதாக செய்திகள் வெளியாகின. வன்முறையில் பல்வேறு தொண்டர்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியது. 

ஆனால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது.  இது தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது.  இத்தகைய பரபரப்பான அரசியல்  சுவேந்து அதிகாரியின் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை
குஜராத் முதல் மந்திரியாக இருந்து வந்த விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2. காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது; ராகுல் காந்தி
புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
3. ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக முயற்சி: ராகுல் காந்தி விமர்சனம்
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார்.
4. சுவேந்து அதிகாரிக்கு சிஐடி போலீஸ் சம்மன்
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு அம்மாநில சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
5. பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்?: ராகுல் காந்தி கேள்வி
பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது. ஆனால் உங்களின் வருமானம்? என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.