தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளின் விலை எவ்வளவு? மத்திய அரசு விவரம் வெளியீடு


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளின் விலை எவ்வளவு? மத்திய அரசு விவரம் வெளியீடு
x
தினத்தந்தி 8 Jun 2021 3:49 PM GMT (Updated: 8 Jun 2021 4:05 PM GMT)

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

புதுடெல்லி

நாடு முழுவதும்  18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை பெற்று மாநிலங்களுக்கு மத்திய அரசே நேரடியாக விநியோகிக்கும் என்று  பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். மேலும் 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கான விலை விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி  ஒரு டோஸ் விலை  ஜி.எஸ்.டி மற்றும் சேவை வரிகள் உள்பட ரூ.780- ஆக நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி ரூ. 1410 ஆகவும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி 1145 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தற்போது அறிவித்த விலையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story