கொரோனா அடுத்த அலையில் குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பா? எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்


கொரோனா அடுத்த அலையில் குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பா?  எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்
x
தினத்தந்தி 8 Jun 2021 5:25 PM GMT (Updated: 8 Jun 2021 5:25 PM GMT)

கொரோனா மூன்றாவது அலையில், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவை உலுக்கிய கொரோனா 2-வது அலை தற்போது  சற்று தணியத்தொடங்கியுள்ளது. எனினும், கொரோனா தடுப்பூசியை விரைவாக போடாவிட்டால் 3-வது அலையை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை உருவானால், குழந்தைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம்  பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் கூட குழந்தைகள்  பாதிக்கப்பட்டனர். இதுவரை கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் பேர் இணைநோய்கள் அல்லது எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களாகவே உள்ளனர்.  

அடுத்தடுத்த கொரோனா அலைகளில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு சர்வதேச அளவிலோ இந்தியாவிலோ  எந்த தரவுகளும் இல்லை” என்றார். 


Next Story