கொரோனா பாதிப்பு: தெலுங்கானாவில் நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு


கொரோனா பாதிப்பு:  தெலுங்கானாவில் நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 12:58 AM GMT (Updated: 9 Jun 2021 12:58 AM GMT)

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் சாத்துபள்ளி, மதீரா, நலகொண்டா, நாகார்ஜுனா சாகர், முனுகோடு, தேவரகொண்டா, மிரியல்குடா ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இந்நிலையில், தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்த ஊரடங்கானது ஜூன் 10ந்தேதியில் இருந்து 19ந்தேதி வரை அமலில் இருக்கும்.

எனினும், இதில் சில தளர்வுகளையும் மாநில அமைச்சரவை அறிவித்து உள்ளது.  இதன்படி, காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இதுதவிர, அலுவலகங்களில் இருந்து வீட்டு செல்வதற்கு ஏதுவாக மாலை 6 மணிவரை, ஒரு மணிநேரம் கூடுதல் தளர்வும் அறிவிக்கப்பட்டு உள்ளது.



Next Story