தேசிய செய்திகள்

யாஸ் புயல்: ஒடிசாவில் 75 லட்சம் பேர் பாதிப்பு; அரசு அதிகாரி தகவல் + "||" + Yas storm: 75 lakh affected in Odisha; Government official information

யாஸ் புயல்: ஒடிசாவில் 75 லட்சம் பேர் பாதிப்பு; அரசு அதிகாரி தகவல்

யாஸ் புயல்:  ஒடிசாவில் 75 லட்சம் பேர் பாதிப்பு; அரசு அதிகாரி தகவல்
ஒடிசாவில் யாஸ் புயலால் 10,644 கிராமங்களை சேர்ந்த 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.
புவனேஸ்வர்,

வங்க கடலில் உருவான யாஸ் புயல் கடந்த மே மாதம் 26ந்தேதி ஒடிசா அருகே கரையை கடந்தது.  இதனால், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது.  புயலால் பெரும் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஒடிசா மாநில அரசு அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள செய்தியில், புயலுக்கு ஒடிசாவின் 11 மாவட்டங்களில் உள்ள 2,138 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 10 ஆயிரத்து 644 கிராமங்களில் வசித்து வரும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.

இதுதவிர, 30 நகர்ப்புற பகுதிகளில் உள்ள 425 வார்டுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.  26 ஆயிரத்து 781 வீடுகள் சேதமடைந்து உள்ளன.  12.77 லட்சம் கால்நடைகள் மற்றும் 6 ஆயிரத்து 348 ஹெக்டேர் நிலங்கள் ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று, கடலோர கிராமங்கள் மற்றும் புயல் பாதிப்பு அதிகம் இருக்க கூடிய பகுதிகளில் வசித்த 7.10 லட்சம் பேர் புயலை முன்னிட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உள்பட 7 துறை சார்ந்த 7 மூத்த உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று ஒடிசாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்துள்ளது.  இதன்பின்னர் தலைமை செயலாளர் சுரேஷ் சந்திரா உள்ளிட்ட மாநில மூத்த அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மின்தடை இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மின்தடைகள் இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
2. நிலத்தடி நீரை அதிகம் எடுப்பதால் பாதிப்பு
நாகாட்சி ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீரை அதிகம் எடுப்பதால் பாதிப்பு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் ஆட்சேபனையை ஏற்க முடியாது
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் ஆட்சேபனையை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் பக்தர்களுக்கான வசதிகள் அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருப்பதிபோல் தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கீடு: திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் பக்தர்களுக்கான வசதிகள் அமைச்சர் சேகர்பாபு தகவல்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம் கலெக்டர் தகவல்.