தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதி 17 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல் + "||" + 17 Killed, 5 Injured In Bus Accident In Kanpur

உத்தரபிரதேசம்: ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதி 17 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

உத்தரபிரதேசம்: ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதி 17 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்
உத்தரபிரதேசத்தில் ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று இரவு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று தலைநகர் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. 

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்சிண்டி என்ற பகுதியில் சென்ற போது சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார். 

அதேபோல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது... சோதனை முயற்சியில் 22 நோயாளிகள் பாதிப்பு...? உண்மையா...?
உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என, ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தி சோதனை முயற்சி நடத்தியதால், 22 நோயாளிகள் பாதிக்கபட்டதாக புகார் எழுந்துள்ளது.
2. நடனமாட கூறி குடித்து விட்டு கலாட்ட செய்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள்
மணமகளை நடனமாடும்மாறு கூறி குடித்து விட்டு கலாட்ட செய்த மணமகனால் திருமணத்தை மணமகள் நிறுத்தினார்.
3. பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 2 முக்கிய தலைவர்களை நீக்கிய மாயாவதி
கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சட்டமன்ற கட்சி தலைவர் உட்பட 2 எம்.எல்.ஏ.க்களை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
4. உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி: 22 பேருக்கு தீவிர சிகிச்சை
உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு துயர சம்பவமாக கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகினர்.
5. உத்தரபிரதேசம்: சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி
உத்தரபிரதேசத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து மாடி வீடு தரைமட்டமானது. இதில், 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானார்கள்.