தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம் ; மாநில அரசுகளுக்கு 74 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசு ஆர்டர் + "||" + Pricing in private hospitals; ’’ central government has ordered 74 crore vaccines for state governments

தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம் ; மாநில அரசுகளுக்கு 74 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசு ஆர்டர்

தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம் ; மாநில அரசுகளுக்கு  74 கோடி தடுப்பூசிகள்  மத்திய அரசு ஆர்டர்
மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மேலும் 74 கோடி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி

முதல் அலையில் இருந்து மெல்ல மீண்டதன் மூலம் பெற்ற சிறிய நம்பிக்கையையும் இந்த 2-வது அலை சீரழித்துவிட்டது. அன்றாடம் நிகழும் பல்லாயிரக்கணக்கான பாதிப்புகளும், மரணங்களும் நூற்றாண்டுகளில் இல்லாத பேரழிவுக்கு சாட்சியாக மாறியிருக்கின்றன.

ஆட்கொல்லியாக உயிர்களை காவு வாங்கி வரும் இந்த தொற்றுக்கு எதிரான மருந்துகள் இல்லாததால் மீண்டும் பொதுமுடக்கமே தீர்வாக மாறியிருக்கிறது. அப்படி தீவிரமாக அமல்படுத்திய ஊரடங்கால் மெல்ல நிலைமை மாறி வருகிறது.

அதேநேரம் கட்டுப்பாடுகள், ஊரடங்கு போன்றவை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இப்படி சொல்ல முடியாத துயரத்தில் தள்ளப்பட்டிருக்கும் மக்களை, அதில் இருந்து மீட்டெடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன.

இதில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி திட்டத்தை அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கும் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளும் கொள்முதல் செய்யும் வகையில் திட்டத்தை பரவலாக்கியது.

இதன்படி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநிலங்களே தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகின்றன. அதைப்போல வெளிநாடுகளில் இருந்தும் நேரடியாக இறக்குமதி செய்யும் நடவடிக்கையிலும் இறங்கின.

ஆனால் இந்த பணிகள் மாநிலங்களுக்கு பெரும் சவாலாக மாறி வருகின்றன. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்காததால், பல மாநிலங்களில் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

எனவே மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை வைத்து இருந்தன.

இந்த நிலையில் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி  

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை இனி மத்திய அரசு முழுமையாக நடத்தும். தடுப்பூசி விநியோகத்தில் இனி மத்திய அரசு முடிவெடுக்கும்

 மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும். கொரோனா தடுப்பூசிகளுக்காக மாநிலங்கள் இனி செலவழிக்க தேவை இல்லை. வரும் ஜூன் மாதம் 21 -ம் தேதி புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும் என கூறினார்.

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மக்கள் தொகை எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கப்படும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 25,06,41,440 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 23,74,21,808 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 1,33,68,727 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 3,81,750 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது என தெர்விக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து புதிதாக 44 கோடி டோஸ்கள் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதவிர, தற்போது பரிசோதனை நிலையில் இருக்கும் பயலாஜிக்கல்-இ தடுப்பூசிகளை 30 கோடி எண்ணிக்கையில் கொள்முதல் செய்யவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்திற்குள் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 53 கோடி தடுப்பூசிகள் அரசிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு இறுதிக்குள் மொத்தம் 127 கோடி தடுப்பூசிகள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 18 வயது பூர்த்தியான அனைவருமே இனி இலவசமாகத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது.

 இதனிடையே தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கோவிஷீல்டு 780 ரூபாய்க்கும் கோவாக்சின் ஆயிரத்து 410 ரூபாய்க்கும் ஸ்புட்னிக் வி ஆயிரத்து 145 ரூபாய்க்கும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசிகொள்முதல் விலை ரூ.ஜி.எஸ்.டி. 5%சர்வீஸ் சார்ஜ்அதிகபட்ச கட்டணம்
கோவிஷீல்டு60030150780
கோவாக்சின்1200601501410
ஸ்புட்னிக் வி948471501145

தனியார் மருத்துவமனைகள் சேவை கட்டணமாக ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 150 ரூபாய் கட்டணம் பெறலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் கூடுதலான கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம்
இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்து உள்ளார்.
2. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகத்தையும் இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகத்தையும் இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
3. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும்
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
4. இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
5. கொரோனா 3-வது அலை:அடுத்த 100 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்- மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா 3-வது அலை: அடுத்த 100 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.