தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,959 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affects 10,959 new people in Karnataka in the last 24 hours

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,959 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,959 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 959 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் மாநிலத்தில் இன்று புதிதாக 10 ஆயிரத்து 959 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 28 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 20 ஆயிரத்து 246 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 80 ஆயிரத்து 411 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 192 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 261 பேர் பலி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் மேலும் 9,808- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,808- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் புதிதாக 11,958- பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் இன்று புதிதாக 11,958- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25,659 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடக மாநிலத்தில் தற்போது 2,54,505 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. பெங்களூருவில் வருகிற 14-ந் தேதி வரை 144 தடை நீட்டிப்பு
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருகிற 14-ந் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.