உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி


உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 9 Jun 2021 8:04 PM GMT (Updated: 9 Jun 2021 8:04 PM GMT)

உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் மெல்காட் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தடுப்பூசி மீது சந்தேகம் அடைந்து அதை போட்டுக்கொள்ள தயங்கியுள்ளனர். 

இதையடுத்து உள்ளூர் நிர்வாகம் பழங்குடியின மக்கள் பேசும் மொழியான கோர்கு மொழியிலேயே தடுப்பூசி குறித்து எடுத்துரைத்துள்ளனர். இதையடுத்து,  பழங்குடியின மக்கள் தங்கள் அச்சம் தவிர்த்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்தாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியானது. 

இந்த நிலையில், இந்த செய்தியை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “ மெல்காட் வனப்பகுதியில் நடந்த நிகழ்வு உள்ளூர் மொழியின் சக்தியையும், அனைத்து மொழிகளையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது” என்றார்.

Next Story