மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா


மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Jun 2021 9:57 PM GMT (Updated: 9 Jun 2021 10:34 PM GMT)

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் 2-வது கொரோனா அலை கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தில் இருந்தது.

மும்பை, 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் 2-வது கொரோனா அலை கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு அங்கு பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த 31-ந் தேதி முதல் அங்கு 1 முதல் 3 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அங்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது. அங்கு புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. தாராவியில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகளை மீறி இரவு நேரங்களிலும் மார்க்கெட் பகுதிகள் செயல்பட்டு வருகின்றன. 

அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை வாங்கி வருகின்றனர்.இதுவரை தாராவியில் 6 ஆயிரத்து 848- பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6 ஆயிரத்து 468-பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 24 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story