தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ், தடுப்பூசி குறித்து ராகுல் காந்தி பேசியவை உண்மையாகி உள்ளன- சிவசேனா + "||" + Sanjay Raut Praises Rahul gandhi

கொரோனா வைரஸ், தடுப்பூசி குறித்து ராகுல் காந்தி பேசியவை உண்மையாகி உள்ளன- சிவசேனா

கொரோனா வைரஸ், தடுப்பூசி குறித்து ராகுல் காந்தி பேசியவை உண்மையாகி உள்ளன- சிவசேனா
ராகுல் காந்தி கூறிய பல விஷயங்கள் சரியாக இருப்பதால், அவரது வார்த்தைகளில் வலு உள்ளது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பை, 

பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடும் என அறிவித்தார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கொரோனா வைரஸ் கையாளும் முறை, தடுப்பூசி கொள்கையிலும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பொது மக்களுக்கு அதிகளவில் தடுப்பூசி போட்டு இருந்தால், 2-வது அலையால் நாடு இந்தநிலைக்கு மோசமாகி இருக்காது எனவும் அவர் கூறியிருந்தார். இந்தநிலையில் ராகுல் காந்தியின் விமர்சனங்கள், கருத்துகள் சரியாக உள்ளதா என்பது குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் கேட்கப்பட்டது.

இதற்கு அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தி கூறிய பல விஷயங்கள் சரியாக இருந்து உள்ளன. சில அல்ல, அவரது பல கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. அவர் கொரோனா வைரஸ் அல்லது தடுப்பூசி குறித்து பேசியவை உண்மையாகி உள்ளன. அவரது வார்த்தைகளில் வலு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் இடையே கடும் மோதல்
ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக மும்பையில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர்.
2. எதிர்காலத்தில் பாஜகவுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைக்கலாம்: ராம்தாஸ் அத்வாலே
மராட்டியத்தில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்கக்கூடும் என்று ராம்தாஸ் அத்வாலா தெரிவித்துள்ளார்.
3. மத்திய அரசின் தனியார் மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது - ராகுல் காந்தி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4. சிவசேனா நம்பகமான கட்சி; மராட்டிய கூட்டணி அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும்: சரத்பவார் நம்பிக்கை
மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசு முழு ஆட்சிகாலத்தையும் நிறைவு செய்யும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி
உள்ளூர் மொழிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.