தேசிய செய்திகள்

விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் : பாபா ராம்தேவ் + "||" + Ramdev lauds centralised vaccination drive announcement, says will take jab soon

விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் : பாபா ராம்தேவ்

விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் : பாபா ராம்தேவ்
விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடு முழுவதும் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், மாநிலங்களுக்கு மத்திய அரசு நேரடியாக தடுப்பூசிகளை விநியோகிக்கும் என்றும் பிரதமர் மோடி புதிய தடுப்பூசி கொள்கையை வெளியிட்டார். 

இந்த நிலையில், மத்திய அரசின் முடிவை யோகா குரு பாபா ராம்தேவ் பாராட்டியுள்ளார். ராம் தேவ் கூறும் போது, “ஜூன் 21 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  நானும் விரைவின் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்” என்றார்.