தேசிய செய்திகள்

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு + "||" + Nine killed, 8 injured as residential structure collapses in Mumbai's Malad West

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு
மும்பையில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின்  மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 9- பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.  

கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த மராட்டிய மந்திரி அஸ்லாம் ஷைக், மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தொய்வின்றி நடப்பதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் இடையே கடும் மோதல்
ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக மும்பையில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர்.
2. மும்பையில் பலத்த மழை- கடும் போக்குவரத்து நெரிசல்
மும்பையில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
3. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 9- வது தளத்தில் தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டதும் 9-வது தளத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
4. மும்பை, தானே நகரங்களில் பரவலாக மழை
மராட்டியத்தில் கடந்த 9 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
5. மும்பையில் திடீரென உருவான பள்ளத்தில் விழுந்து மாயமான கார்; சமூகவலைதளத்தில் பரவிய வீடியோவால் பரபரப்பு
மும்பையில் திடீரென உருவான பள்ளத்தில் விழுந்து கார் மாயமாவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.