தேசிய செய்திகள்

கொரோனாவால் நுரையீரல் பாதித்த டாக்டருக்கு உதவ ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள் + "||" + By Corona To help the doctor who has a lung infection Raised Rs 20 lakh The villagers

கொரோனாவால் நுரையீரல் பாதித்த டாக்டருக்கு உதவ ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்

கொரோனாவால் நுரையீரல் பாதித்த டாக்டருக்கு உதவ ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்
கொரோனாவால் நுரையீரல் பாதித்த டாக்டருக்கு உதவ கிராம மக்கள் ரூ.20 லட்சம் திரட்டினர். அதே சமயம் மொத்த செலவையும் ஆந்திர அரசு ஏற்றது.
விசாகப்பட்டினம். 

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் பாஸ்கர் ராவ் (வயது 38). இவர் ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (34). டாக்டரான இவர், குண்டூர் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு இரவு, பகலாக மருத்துவ சேவை புரிந்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், இருவரும் கடந்த ஏப்ரல் 24-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாக்கியலட்சுமி கொரோனாவில் இருந்து விடுபட்டார். ஆனால், பாஸ்கர்ராவ் தீவிர நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். முதலில் அவர், குண்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து விஜயவாடா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக ரூ.2 கோடி வரை செலவாகலாம் எனவும் கூறினர்.

இதை கேட்டு அவரது மனைவி பாக்கியலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும், சிறிதளவு பணத்தை திரட்டி, அங்கிருந்து ஐதராபாத் கச்சிபல்லி ஆஸ்பத்திரியில் கணவரை சேர்த்தார். மேலும் தனக்கு தெரிந்த சிலர் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் பணத்தை திரட்ட முடிவு செய்தார்.

தங்களது கிராமத்துக்கு இரவும், பகலும் அயராது மருத்துவ சேவை புரிந்த டாக்டர் பாஸ்கர் ராவ் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் எனும் தகவல் கரஞ்சேடு கிராம மக்களுக்கு எட்டியது. அதிர்ச்சியுற்ற அவர்கள் அனைவரும் ஒன்று கூடி டாக்டருக்கு உதவ முடிவு செய்தனர்.

அதன்படி, பலர் தங்களால் முடிந்த அளவு பணத்தை சேர்த்தனர். பலர் சேமிப்பு பணத்தை கூட டாக்டரின் உயிர் காக்க கொடுக்க முன் வந்தனர். அதன்படி ரூ.20 லட்சம் வரை சேர்ந்தது. அவற்றை டாக்டர் பாக்கியலட்சுமியிடம் கொடுத்து, இந்த பணத்தை வைத்துக்கொண்டு மருத்துவ செலவை கவனியுங்கள் என கூறினர்.

டாக்டர் பாஸ்கர்ராவ் பாதிக்கப்பட்டது குறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரியவந்தது. உடனே அவர், பாஸ்கர் ராவின் சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்கும் என் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியிடம் தாலிசங்கிலி திருட்டு மரித்து போன மனிதநேயம்
ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிசெயின் திருடப்பட்டது.
3. மத்தூர் அருகே கொரோனாவால் இறந்ததாக கருதி பெண்ணின் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
மத்தூர் அருகே கொரோனாவால் இறந்ததாக கருதி பெண்ணின் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
4. கொரோனாவால் மரித்துப்போன மனிதாபிமானம்: பெற்ற தாயை வீட்டுக்குள் விட மறுத்த மகள்
கொரோனாவால் மனிதாபிமானம் மரித்து போய்விட்டது என சொல்லும் அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயையே வீட்டுக்குள் விட மகள் மறுத்த சம்பவம் நடந்து உள்ளது.
5. மத்தியபிரதேசத்தில் துயர சம்பவம் கொரோனாவால் கணவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவி தற்கொலை
மத்தியபிரதேசத்தில் துயர சம்பவம் கொரோனாவால் கணவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவி தற்கொலை ஆஸ்பத்திரியின் 5-வது மாடியில் இருந்து குதித்தார்.