தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: டெல்லி காங்கிரஸ் இளைஞர் அணியினர் நூதன போராட்டம் + "||" + Youth Cong sends bicycles to Modi, Shah over fuel price rise

பெட்ரோல் விலை உயர்வு: டெல்லி காங்கிரஸ் இளைஞர் அணியினர் நூதன போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வு: டெல்லி காங்கிரஸ் இளைஞர் அணியினர் நூதன போராட்டம்
பெட்ரோல் விலையை கண்டித்து பிரதமருக்கு சைக்கிள் அனுப்பி டெல்லி காங்கிரஸ் இளைஞர் அணியினர் நூதன முறையில் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை நோக்கி பயணித்து கொண்டே வருகிறது. தினமும் ஏறுமுகத்திலேயே இருந்து, வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்துள்ளது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் இளைஞர் அணியினர் பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கொரியர் மூலம் சைக்கிள் அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுமான அமித் ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டவர்களுக்கு சைக்கிள்களை அனுப்பி வைத்தனர்.