தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று புதிதாக 14,424 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Kerala reports 14,424 new COVID cases, 194 deaths in 24 hours

கேரளாவில் இன்று புதிதாக 14,424 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று புதிதாக 14,424 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று புதிதாக 14 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 14 ஆயிரத்து 424 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 26,58,565 ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 17 ஆயிரத்து 994 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 42 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 07 ஆயிரத்து 250 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 22,129 பேருக்கு தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,129 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் புதிதாக 11,586 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 135 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,586 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 48- ஆக உயர்ந்துள்ளது.
5. கேரளாவில் புதிதாக 17,466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,466 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.