தேசிய செய்திகள்

அலகாபாத் உயர் நீதிமன்ற நிதிபதியாக சஞ்சய் யாதவ் நியமனம் + "||" + Justice Sanjay Yadav appointed Chief Justice of Allahabad High Court

அலகாபாத் உயர் நீதிமன்ற நிதிபதியாக சஞ்சய் யாதவ் நியமனம்

அலகாபாத் உயர் நீதிமன்ற நிதிபதியாக சஞ்சய் யாதவ் நியமனம்
அலகாபாத் உயர் நீதிமன்ற நிதிபதியாக சஞ்சய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் யாதவை ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதி துறை வெளியிட்டுள்ளது. 1986-ம் ஆண்டு வழக்கறிஞராக பயணத்தை தொடங்கிய அவர் 1999 மார் முதல் 2005 அக்டோபர் வரை வழக்கறிஞராகவும், 2005 முதல் துணை தலைமை வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.

அதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2007 ஆண்டிலும், நிரந்தர நீதிபதியாக 2010 ஆண்டிலும் அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக 2021 ஏப்ரல் 14 வரை அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.