தேசிய செய்திகள்

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி + "||" + Farmers happy with the opening of water for irrigation

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
மலம்புழா, மங்களம் அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாலக்காடு,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதாவது கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. ஆனால் திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் சரிவர மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் பாசனத்துக்கு மலம்புழா மற்றும் மங்களம் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று மலம்புழா மற்றும் மங்களம் ஆகிய அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.