அரியானா, மணிப்பூர், தெலுங்கானா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்


அரியானா, மணிப்பூர், தெலுங்கானா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
x
தினத்தந்தி 10 Jun 2021 6:26 PM GMT (Updated: 10 Jun 2021 6:26 PM GMT)

அரியானா, மணிப்பூர், தெலுங்கானா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

அரியானா

அரியானா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,64,633 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,861 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,221 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,49,407 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் தற்போது 6,365  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மணிப்பூர்

மணிப்பூர் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,081 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.41 சதவிகிதமாகப் பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 925 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 668 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,797 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 9,359 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தெலுங்கானா

தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 1,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,98,611 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.41 சதவிகிதமாகப் பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,440 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,524 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,71,610 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 23,561 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story