தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்துக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி: ஜே.பி.நட்டா + "||" + India's big vaccine push: 200 crore doses to be available by December, JP Natta says

டிசம்பர் மாதத்துக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி: ஜே.பி.நட்டா

டிசம்பர் மாதத்துக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி: ஜே.பி.நட்டா
டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் 200 கோடி தடுப்பூசி இருக்கும் என்று ஜே.பி.நட்டா கூறினார். நிலம், நீர், ஆகாய மார்க்கமாக மோடி ஆக்சிஜன் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

அருணாசலபிரதேசத்தில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனாவை எதிர்கொள்ள மோடி தலைமையிலான இந்திய அரசு தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்ட விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அது பாராட்டத்தக்கது. இந்தியாவின் வலிமையை காட்டுகிறது. கொரோனா விசுவரூபம் எடுத்தபோது, மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மோடி எந்த வாய்ப்பையும் விட்டு வைக்காமல், நிலம், நீர், ஆகாய மார்க்கமாக ஆக்சிஜனை கொண்டுவந்து ஒரு வாரத்தில் தட்டுப்பாட்டை போக்கினார். 900 டன்னாக இருந்த ஆக்சிஜன் உற்பத்தி, 9 ஆயிரத்து 446 டன்னாக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி உற்பத்தியில் 19 நிறுவனங்கள்

முன்பெல்லாம் போலியோ, தட்டம்மை போன்றவற்றை ஒழிப்பதற்கான தடுப்பூசி தயாராவதற்காக 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால், கொரோனா இந்தியாவுக்கு வந்த 9 மாதங்களில் மோடி அரசு 2 தடுப்பூசிகளை உருவாக்கி விட்டது. முதலில் 2 நிறுவனங்கள்தான் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டன. தற்போது, 13 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் 19 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடும். அதன்மூலம் இந்தியாவிடம் 200 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும்.

காங்கிரஸ் சந்தேகம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கட்சி சந்தேகமும், வதந்தியும் எழுப்பியது. அதன்மூலம் தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க பார்த்தது. ஆரம்பத்தில் நாட்டில் ஒரே ஒரு கொரோனா பரிசோதனை நிலையம் இருந்தநிலையில், தற்போது 2 ஆயிரத்து 500 நிலையங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 1,500 மாதிரிகளை பரிசோதித்து வந்த நாம், தற்போது 25 லட்சம் மாதிரிகளை பரிசோதித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 30.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 30.4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன்? - சிவசேனா விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன் என்பதற்கு சிவசேனா விளக்கம் அளித்துள்ளது.
3. அமெரிக்காவில் இதுவரை 30.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 30.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கடும் தட்டுப்பாடு தமிழகத்தில் 28,763 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கடும் தட்டுப்பாடு தமிழகத்தில் 28,763 பேருக்கு கொரோனா தடுப்பூசி.
5. தமிழகத்திலேயே காஞ்சீபுரம் மாவட்டம் முதல் இடம்: 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8.51 சதவீதம் கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8.51 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.